சேரனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது
ஜூலை 22, 2024
Advertisement
பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார். கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கினார். விரைவில் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். அதேசமயம் நடிகராகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது முதன்முறையாக மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி சேரன் வெளியிட்ட பதிவில், ‛‛நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் இணைந்து "இஸ்க்" படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன். என்றும் போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி"" என குறிப்பிட்டுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!