தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் சரத்குமார். தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கிறார். தவிர பா.ஜ., கட்சியிலும் உள்ளார். இவர் கடந்தாண்டு ஸ்ரீ
கிருஷ்ணா என்பவரிடம் 2 கோடி கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்த செக் வழங்கி உள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் அந்த செக் திரும்ப வந்தது. இதையடுத்து சரத்குமார் மீது சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஸ்ரீகிருஷ்ணா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வருகிற செப்., 10ம் தேதி சரத்குமார் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு அவருக்கு நீதிமன்றம் சம்மன் வழங்கி, வழக்கை தள்ளி வைத்தது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!