நண்பன் நாயகி இலியானா தோற்றத்தில் மாற்றம்?
பிப் 05, 2022
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடித்து வெளிவந்த "நண்பன்" படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இலியானா. அதன்பிறகு தமிழ்ப்படங்களில் அவர் நடிக்கவேயில்லை. ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
எப்போதுமே மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருப்பவர் இலியானா. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த வாரம் கூட பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூட ஒல்லியாகத்தான் தெரிகிறார். ஆனால், நேற்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கொஞ்சம் குண்டாக மாறியிருக்கிறார்.
மேலும் தன்னுடைய புதிய தோற்றம் குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில், “உங்களை ஒல்லியாக, அதிக நிறத்துடன்…etc..etc… காட்டக் கூடிய மொபைல் அப்ளிகேஷன்களுக்கு அடிமையாவது மிகவும் எளிது. அது எல்லாவற்றையும் நான் தற்போது டெலிட் செய்துவிட்டேன். அவற்றிற்குப் பதிலாக இப்போது இதைத் தேர்வு செய்துள்ளேன். இதுதான் நான், என்னுடைய ஒவ்வொரு அங்குலத்தையும், ஒவ்வொரு வளைவையும் பற்றி பெருமைப்படுகிறேன்,” என வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளார்.
பலரும் இப்படி மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தித்தான் தங்களது புகைப்படங்களை அழகாகப் பதிவிடுகிறார்கள் என்ற உண்மையை உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறார் இலியானா.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!