
சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு
ஆக 09, 2022
Advertisement
ரஜினியை வைத்து சந்திரமுகி படத்தை இயக்கிய பி .வாசு இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ராகவா லாரன்ஸை வைத்து இயக்கி வருகிறார். சந்திரமுகி படத்தில் நடித்த வடிவேலுவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மரகதமணி இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சந்திரமுகி- 2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கிய நிலையில், ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் மைசூரில் நடைபெற்று வந்த முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள லைகா நிறுவனம், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவித்திருப்பதோடு இந்த ஆண்டுக்குள் சந்திரமுகி -2 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!