நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன்
Advertisement
Advertisement
நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன்
ஆக 09, 2022
அ நிறம் | அளவு
Advertisement
செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு உருவான புஷ்பா படத்தில் நாயகனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். அவருடன் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் 350 கோடிக்கு மேல் வசூலித்தது. அதைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் படத்தில் விரைவில் நடிக்கப் போகிறார் அல்லு அர்ஜுன். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் சுதந்திர தின கொண்டாட்ட பேரணி ஒன்று நடைபெற உள்ளது. இந்த பேரணியில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி கலந்து கொள்கிறார் அல்லு அர்ஜுன். அதோடு இதற்கு முன்பு வெளிநாடுகளில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்ட பேரணிகளை விட இந்த பேரணி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!