கருப்பு : ஒரு எடிட்டருக்கு முதல் முறையாக கார் பரிசு
ஜூன் 01, 2026
சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடித்த "கருப்பு" படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இன்னும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஆகியோர் நேற்று சூர்யாவிடமிருந்து பரிசாகப் பெற்ற கார்களுடன் புகைப்படங்களைப் பதிவிட்டு நன்றி தெரிவித்திருந்தனர்.
அவர்களுக்கு அடுத்து படத்தின் எடிட்டர் கலைவாணன், அதே ரக கார் ஒன்றுடன் புகைப்படத்தைப் பதிவிட்டு, "கடவுளின் செயல், சூர்யா அண்ணா நன்றி, எங்கள் ரோலக்ஸிடமிருந்து லைப் டைம் செட்டில்மென்ட்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவருக்கு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, “ஒரு ஹீரோவிடமிருந்து முதல் முறையாக ஒரு எடிட்டர் பரிசு பெற்றுள்ளார்,” என்று நாயகன் சூர்யாவுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.
பொதுவாக ஒரு படம் பெரும் வெற்றி பெற்றால் படத்தின் இயக்குனருக்குத்தான் கார் பரிசு அளிப்பார்கள். ஆனால், இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியோருக்கும் பரிசளித்துள்ளார்கள்.
இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு அடுத்து பரிசு காத்திருக்கிறது, அது என்ன என்பது கூடிய சீக்கிரம் தெரிந்துவிடும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!