சிரஞ்சீவி படத்திற்கு பிரம்மாண்ட கோயில் செட்
ஜன 03, 2021
Advertisement
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் "ஆச்சார்யா" தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
அப்படத்திற்காக ஐதராபாத் புறநகர் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான கோயில் செட் ஒன்றை அமைத்துள்ளார்களாம். 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 கோடி செலவு செய்து அந்த செட்டை கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜன் உருவாக்கியிருக்கிறார்.
இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இப்படி ஒரு செட் அமைத்ததில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கோயில்கள், அறநிலையத் துறை பின்னணியில் தான் "ஆச்சார்யா" படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். அதில் இந்த பிரம்மாண்ட கோயில் செட்டும் முக்கிய கதைக்களமாக உள்ளதாம். படத்தை இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!