
ரகுமானுடன் நடிக்கும் பாவனா
மே 26, 2023
Advertisement
சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோகங்களுக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பாவனா தற்போது பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார். பிங்க் நோட், கேஸ் ஆப் கொன்டனா என்ற கன்னட படங்களிலும் "ஹன்ட்" என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரகுமானுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி உள்ளது. இதில் ரகுமான் போலீஸ் அதிகாரியாகவும், பாவனா தடயவியல் மருத்துவராகவும் நடிக்கிறார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். புதுமுக டைரக்டர் ரியாஸ் மாரத் டைரக்டு செய்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தை அதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…