
தமிழில் வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட்
இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து செப்டம்பர் 4ம் தேதி வெளியிட உள்ளார்கள். அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தை நடிகர் பகத் பாசில் உள்ளிட்டவர்கள் தயாரித்துள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தொடர்ந்து சில தோல்விகளால் தடுமாறி வந்த நிவின் பாலிக்கு கடந்த வருடம் வெளியான "சர்வம் மாயா" பெரிய வெற்றியைப் பெற்று 150 கோடி வசூலித்தது. அதற்கடுத்து இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த "பேபி கேர்ள்" படம் படுதோல்வியைத் தழுவியது.
இருப்பினும் தற்போது வந்துள்ள "பெத்லகேம் குடும்ப யூனிட்" மீண்டும் ஒரு வெற்றியைத் தந்துள்ளது. அதனால், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பைப் பார்க்க தமிழ் சினிமா ரசிகர்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!