கலாவதி சாதனையை ஒரே நாளில் காலாவதி ஆக்கிய அரபிக்குத்து
பிப் 15, 2022
Advertisement
தென்னிந்திய அளவில் புதிய சாதனை என மகேஷ் பாபுவின் "சர்க்காரு வாரி பாட்டா" படத்தின் முதல் சிங்கிளான "கலாவதி" பாடலின் சாதனையை ஒரு நாள் கூட கொண்டாடவிடவில்லை "அரபிக்குத்து".
கடந்த சில நாட்களாகவே விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபு ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் சண்டை நடந்து வந்தது. விஜய்யின் "பீஸ்ட்" படத்தின் முதல் சிங்கிளான "அரபிக்குத்து" பாடலும், மகேஷ்பாபுவின் தெலுங்குப் படமான "சர்க்காரு வாரி பாட்டா" படத்தின் முதல் சிங்கிளான "கலாவதி" பாடலும் நேற்று பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என அறிவித்தார்கள்.
ஆனால், "கலாவதி" பாடலை ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13ம் தேதியன்றே வெளியிட்டார்கள். தென்னிந்திய அளவில் "ஆல் டைம் ரெக்கார்டு" என 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகள், 8 லட்சம் லைக்குகள் என "சர்க்காரு வாரி பாட்டா" குழு கொண்டாட ஆரம்பித்தது. ஆனால், அவர்களது மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது.
"கலாவதி" பாடல் 24 மணி நேரத்தில் படைத்த சாதனையை அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக "பீஸ்ட்" சிங்கிளான "அரபிக்குத்து" முறியடித்துவிட்டது. நேற்று மாலை யூ டியூபில் வெளியான இந்தப் பாடல் இதுவரையிலும் 20 மில்லியன் பார்வைகள், 2 மில்லியன் லைக்குகள் சாதனை என 17 மணி நேரத்திற்குள்ளாகவே மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்திற்குள் அதிகப் பார்வைகள், அதிக லைக்குள் என புதிய சாதனையைப் படைத்துள்ள" அரபிக்குத்து". யு டியூப் சாதனைகளில் விஜய் பாடல்கள்தான் எப்போதுமே முன்னிலை என்பதை அவரது ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!