பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார்
ஏப் 02, 2025
Advertisement
டாப் கன், பேட்மேன் பாரெவர் போன்ற படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வால் கில்மர், 65. பேட்மேன் பாரெவர் என்ற படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதுதவிர டாப் கன், ஹீட், வில்லோ, தி டோர்ஸ், தி செயின்ட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2022ல் வெளியான டாம் குரூஸ் உடன் ‛டாப் கன் மேவரிக்" படத்தில் நடித்தார்.
2014ல் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார். இந்நிலையில் நிமோனியா பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலன் இன்றி மறைந்துவிட்டார். வால் கில்மரின் மறைவு ஹாலிவுட் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!