
பாபி தியோல், பூஜா ஹெக்டே இருவரின் பேட் லக்
ஜூலை 24, 2026
Advertisement
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் கூட “அதிர்ஷ்டம், ராசி” ஆகியவற்றைப் பார்ப்பார்கள். படத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து, படத்தில் யார் யார் நடிக்க வேண்டும் என்பதிலிருந்து, படத்தை வெளியிடும் நாள் வரை எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்வார்கள். அப்படி எவ்வளவுதான் பார்த்தாலும் சிலரது "லக்", "பேட் லக்" ஆக அமைந்துவிடும்.
அந்த விதத்தில் மற்ற மொழிகளிலிருந்து, தமிழுக்கு ஆசை ஆசையாக நடிக்க வந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியாமல் தவிப்பவர்கள் என சிலர் இருக்கிறார்கள்.
தமிழில் முதன் முதலில் "முகமூடி" படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கு, ஹிந்தி என நடித்து பிரபலமாகிவிட்டு மீண்டும் தமிழ்ப் பக்கம் வந்தார். விஜய் நடித்த "பீஸ்ட்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து சூர்யாவுடன் "ரெட்ரோ" படத்தில் நடித்தார். அதன்பின் மீண்டும் விஜய்யுடன் "ஜனநாயகன்" படத்தில் நடித்தார். "பீஸ்ட், ரெட்ரோ" இரண்டுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்தன.
நேற்று வெளியான "ஜனநாயகன்" விமர்சன ரீதியாக தோல்வியைத் தழுவிவிட்டது. வசூல் ரீதியாக என்ன நடக்கும் என்பது வார இறுதிக்குள் தெரியும்.
இதே போல சூர்யாவுடனும், விஜய்யுடனும் நடித்தாலும் விமர்சன ரீதியாக தனக்கான வரவேற்பையும் பெறாமல் போய்விட்டார் ஹிந்தி நடிகர் பாபி தியோல். சூர்யாவுடன் "கங்குவா" படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து நேற்று வெளியான "ஜனநாயகன்" படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இரண்டிலுமே அவருடைய நடிப்பை யாரும் பாராட்டி விமர்சிக்கவில்லை. ஒரு படத்திற்கு வில்லன் கதாபாத்திரமும் அதில் நடிக்கும் நடிகரும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படங்கள் புரியவைத்துள்ளன.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!