டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது பாட்ஷா: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
ஜன 20, 2025
Advertisement
சத்யா மூவிஸ் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்து, ரஜினி நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் "பாட்ஷா". நக்மா, ரகுவரன், சரண்ராஜ், ஆனந்த்ராஜ், ஜனகராஜ், விஜயகுமார், யுவராணி மற்றும் பலர் நடித்திருந்தனர், சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். 1995ல் வெளியான இப்படம் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது அட்மாஸ் சவுண்ட் 4கே தொழில்நுட்பத்தில் ரீமாஸ்டர் செய்யப்படுகிறது. ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ் வீரப்பன் சத்யா மூவீஸ் சார்பில் வெளியிடுகிறார். இத்திரைப்படத்தின் 30 ஆண்டுகளையும், சத்யா மூவீஸின் 60வது பொன் விழாவையும் கொண்டாடும் வகையில் இதனை வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டு தேதியை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சிக்கு ரஜினியை அழைக்கும் திட்டமும் இருப்பதாக தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!