
அட்லி -பிரியா தம்பதியரின் குழந்தையின் பெயர்
மே 09, 2023
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கியவர், தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் அட்லிக்கும், நடிகை பிரியாவுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது தங்களது மகனுக்கு அவர்கள் மீர் என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். இதையடுத்து சோசியல் மீடியாவில் சினிமா துறையினரும், ரசிகர்களும் அட்லி - பிரியாவின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!