
லால் சலாம் போஸ்டர் ; ரஜினியின் பெருந்தன்மை
இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் மொய்தீன் கான் என்கிற கதாபாத்திர போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த போஸ்டரில் எந்த இடத்திலுமே ரஜினிகாந்த் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதுமட்டுமல்ல படத்தின் டைட்டிலுக்கு மேலாக விஷ்ணு விஷால், விக்ராந்த் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தான் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் இவர்கள் தான் ஹீரோ என்பதாலும் தன் பெயரை முன்னிலையில் படுத்த வேண்டாம் என ரஜினிகாந்த் பெருந்தன்மையாக கூறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அநேகமாக ரஜினிகாந்த் பெயர் இல்லாமல் அவர் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டர் வெளியாவது இத்தனை வருடங்களில் இதுதான் முதல் முறையாக இருக்கும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!