நான்கு படங்களை தயாரிக்கும் அட்லி
நவ 20, 2023
இயக்குனர் அட்லி தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை தந்தார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த "ஜவான்" திரைப்படமும் வெற்றி பெற்றது. அவர் "A For Apple Studios" என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தக்காரம் ஆகிய படங்களை தயாரித்திருந்தார்.
சமீபத்தில் அட்லி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "இப்போது எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஹிந்தியில் வருண் தவானை வைத்து தெறி படத்தை ரீ-மேக் செய்து தயாரித்து வருகிறேன். இதைத்தொடர்ந்து தமிழில் இரண்டு படங்கள் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரிக்கிறேன். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்"" என தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!