
ஓடிடி சீரிஸ்களில் களமிறங்கும் தமிழ் நடிகர்கள்
இந்நிலையில் சில நடிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்னணி நடிகர்களைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதி ஹிந்தியில், “பார்சி” சீரிஸில் நடித்தார். அத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆர்யா "த வில்லேஜ்" என்ற சீரிஸில் முதல் முறையாக நடித்துள்ளார். இத்தொடர் இந்த வாரம் நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது.
அருண் விஜய் 2022ல் வெளிந்த "தமிழ் ராக்கர்ஸ்" சீரிஸில் நடித்தார். ஜெய் நடிப்பில் "லேபில்" சீரிஸ் கடந்த வாரம் வெளியானது. அதர்வா நடித்த "மத்தகம்" சீரிஸ் ஆகஸ்ட் மாதம் வெளியானது. விமல் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "விலங்கு" சீரிஸ் பரபரப்பான வரவேற்பைப் பெற்றது.
குறிப்பிட்ட இடைவெளியில் இந்த சீரிஸ்கள் வந்தாலும் சினிமாவைப் போன்ற வரவேற்பைப் பெறாமல் இருக்கின்றன. டாப் நடிகர்கள் அல்லது டாப் இயக்குனர்கள் யாராவது இதற்கு முன்பு எடுத்தது போன்ற குட்டிக் கதைகள் இல்லாமல் முழு நீள சீரிஸ்கள் எடுத்தால் மட்டுமே அந்த ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!