
பிரபு சாலமன் - அஷ்வின் கூட்டணியில் உருவாகும் ‛செம்பி
மே 20, 2022
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "குக் வித் கோமாளி" மூலம் பிரபலமடைந்தவர் அஷ்வின். சில மாதங்களுக்கு முன்பு இவரது முதல் திரைப்படமான "என்ன சொல்ல போகிறாய்" வெளியானது. இதையடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் சத்தமின்றி நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. நடிகை கோவை சரளா 90 வயது முதிர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு செம்பி என பெயரிட்டு இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு குழந்தையுடன் அஷ்வின் அமர்ந்துள்ளார். மற்றொரு போஸ்டரில் கோவை சரளா இதுவரை நடித்திராத ஒரு தோற்றத்தில் நடித்துள்ளார். பிரபு சாலமனின் முந்தைய படங்களை போலவே இந்த கதைக்களமும் இயற்கை சார்ந்த இயல்பான கவனம் பெறக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!