
குறும்படத்தில் நடித்த பாவனா
தற்போது பிங்க் நோட் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். இப்படத்தை "ஹாய்" புகழ் ஜிஎன் ருத்ரேஷ் இயக்குகிறார். இதில் பாவனா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இது இரட்டை சகோதரிகள் பற்றிய கதை. அடுத்து, திக்கக்கக்கொரு பிரேமொண்டர்ன் என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார். இதனை ஆதில் மைமூநாத் அஷ்ரப் இயக்குகிறார். பாவனாவுடன் ஷரபுதீன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இது தவிர தி சர்வைவல் என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். இது மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு படம். இதில் பாவனா குத்துச் சண்டை வீராங்கணையாக நடித்திருக்கிறார். மார்பு புற்றுநோயல் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதனை எதிர்த்து போராடி எப்படி வாழ்க்கையிலும், குத்துச் சண்டையிலும் வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!