
முத்தையா இயக்கத்தில் அருள்நிதி?
ஜூன் 26, 2024
குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் முத்தையா. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் தோல்வியடைந்தது. அடுத்த படத்திற்காக தொடர்ந்து சில முன்னனி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இப்போது தனது மகனை வைத்து முத்தையா "சுள்ளான் சேது" என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து நடிகர்கள் விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக்கை ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்க பேசி வந்தார் முத்தையா. ஆனால் இந்தபடம் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதனால் நடிகர் அருள்நிதியை வைத்து அதிரடியான கிராமத்து கதைகளம் கொண்ட புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!