
அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் பாலிவுட் நடிகர்!
போனி கபூரின் மகனும், பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூர் தான் அளித்த ஒரு பேட்டியில், அஜித்குமார் தனக்கு பிடித்த நடிகர் என்றும், அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது பான் இந்தியா படங்களாக தென்னிந்திய படங்கள் வெளியாகி வருவதால் வியாபாரம் விரிவடைந்து அதிகப்படியாக வசூலித்து வருகின்றன. இதனால் அஜித்துடன் இணைந்து நடித்தால் அவர் மூலமாக நானும் மற்ற மொழி ரசிகர்களுக்கு போய் சேருவேன். அதனால் எதிர்காலத்தில் அஜித் நடிக்கும் படங்களில் இணைவதற்கான முயற்சி எடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் அர்ஜுன் கபூர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!