
கேரளாவுக்கு வருகை தந்த தோனியுடன் டொவினோ தாமஸ் சந்திப்பு
கேரளாவிற்கு வருகை தந்துள்ள தோனி அங்கே உள்ள தாஜ் பீகல் ரிசார்ட்டில் தங்கி உள்ளார். அப்போது அங்கே அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார் டொவினோ தாமஸ். இருவரும் பல நிமிடங்கள் கலந்துரையாடியதாகவும் அதில் தோனியிடமிருந்து பல புதிய விஷயங்களை தான் அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ள டொவினோ, தோனியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் அவர் அனைவருக்குமான ஒரு ரோல் மாடல் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!