
மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அர்ஜூன் தாஸ்
ஆக 05, 2023
Advertisement
"கைதி" படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் அர்ஜூன் தாஸ். அதன் பிறகு விக்ரம், மாஸ்டர் படங்களில் நடித்தார். வசந்தபாலன் இயக்கிய அநீதி படத்தின் மூலம் ஹீரோ ஆனார். தற்போது "ரசவாதி" என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். மவுனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்குகிறார். இதில் தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடிக்கிறார். ரம்யா சுப்ரமணியம், ஜி.எம்.சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார். சரவணன் இளவரசு, சிவகுமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். ரொமாண்டிக் கலந்த த்ரில்லர் படமாக தயாராகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!