
ஆக்ஷன் ஹீரோயின் ஆன லட்சுமி மஞ்சு
இதுகுறித்து அவர் கூறும்போது " பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்களில் வரும் பெண் போலீஸ் அதிகாரிகள் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். அது அக்னி நட்சத்திரம் படம் மூலம் நனவாகி இருக்கிறது. எனது கேரக்டருக்கென்றே ஒரு பாடல் உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளது. அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. போலீஸ் வேடத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதோடு, என் கடமையாகவும் நினைக்கிறேன்" என்கிறார் லட்சுமி மஞ்சு.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!