
அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் படம் நிறைவு
செப் 12, 2024
Advertisement
குட் நைட், லவ்வர் போன்ற கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வரும் நிறுவனம் மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ். தற்போது இந்த நிறுவனத்தின் நான்காவதாக ஒரு படம் உருவாகி வருகிறது. இதனை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீ காந்த் இயக்கியுள்ளார். நாயகனாக அர்ஜுன் தாஸ், நாயகியாக அதிதி ஷங்கர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ரொமான்டிக், திரில்லர் கதையில் இந்த படம் தயாராகி உள்ளது. பல்வேறு கட்டங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இதன் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளனர். படத்தின் தலைப்பை அறிவிக்காமலே மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர். மற்ற பணிகள் அடுத்தடுத்து துவங்க உள்ளன. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!