
ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வரும் அரண்மனை 4!
ஏப் 14, 2024
Advertisement
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் சுந்தர். சி. இதில் தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்ததைத் தொடர்ந்து இப்போது இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளனர். மேலும், ஏற்கனவே ஏப்.,26ம் தேதியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள "ரத்னம்" படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!