இப்படியும் ஒரு சாதனை: 12 நாளில் 7 கோடி நிமிடம் ஓடியதாம் அரண்மனை 3
டிச 03, 2021
Advertisement
சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான அரண்மனை 3 படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளதாக ஜீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜீ5 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஜீ5 நிறுவனம் அடுத்தடுத்து நல்ல கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம் திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது அரண்மனை 3" திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது சித்திரை செவ்வானம் படத்தை வெளியிட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!