
சிவகார்த்திகேயன் எழுத விஜய் பாட… பீஸ்ட் முதல் சிங்கிள் ரெடி
இப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை எட்டியுள்ளதாக இரு நாட்களுக்கு முன்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் விஜய் டிரம்ஸ் வாசிக்க, மற்றவர்கள் பின்னால் நடனமாடுவது போன்று இருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இப்படத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால், நடிகர் சிவகார்த்திகேயன் அந்த பாடலை எழுதியுள்ளார். அதோடு விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். விஜய், சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் இப்பாடல் உருவாகி வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!