மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான்
ஏப் 21, 2025
Advertisement
"கர்ணன்" படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ், தனுஷ் இணைய உள்ள புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்கள். அப்படத்தின் மற்றொரு அப்டேட்டை அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேற்று நடைபெற்ற "சுமோ" படத்தின் நிகழ்ச்சியில் கொடுத்துள்ளார்.
“தனுஷ், மாரி செல்வராஜ், ஏஆர் ரஹ்மான் சேர்ந்து அந்தப் படம் பண்றாங்க. அந்தப் படத்துக்கு முன்னாடியே தனுஷ் சார் நடிக்க ஒரு படம் இருக்கிறது. அந்தப் படத்திற்குப் பிறகுதான் மாரி செல்வராஜ் படம் ஆரம்பமாக உள்ளது,” என்று அறிவித்துள்ளார்.
தனுஷின் 56வது படத்தைத்தான் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். அதற்கு முன்பாக "போர் தொழில்" இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ள படத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார். அந்தப் படத்தைப் பற்றித்தான் நேற்று ஐசரி கணேஷ் குறிப்பிட்டுள்ளார். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம்.
"அமரன்" இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் தனுஷ் நடிக்கப் போகிறார். அதற்கான அறிவிப்பும் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!