
நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா
இதனைத் தொடர்ந்து தற்போது புதிதாக உருவாகி வரும் மாய சபா - சீசன் 1 என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் நாகசைதன்யா. இந்த வெப் சீரிஸை தற்போது ராஜமவுலி - மகேஷ் பாபு இருவர் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு வசனம் எழுதி வரும் வசனகர்த்தாவான தேவகட்டா இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட 400 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என தேவகட்டா கூறியுள்ளார். இதற்கு முன்னதாக நாகசைதன்யா 2023ல் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவான தூதா என்கிற வெப் சீரிஸில் முதன்முறையாக நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒரு பக்கம் திரைப்படம் இன்னொரு பக்கம் வெப்சீரிஸ் என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நாகசைதன்யா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!