
காட்டி படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா
இப்போதெல்லாம் ஒரு படம் வெளிவந்தால் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தேடித் தேடிப் போய் பேட்டிகளைத் தருகிறார்கள். வாராவாரம் பல படங்கள் வெளியாவதால் போட்டி நிறையவே இருக்கிறது. பெரிய படங்களுக்குக் கூட புரமோஷன்கள் தேவைப்படுகிறது. ஆனால், "காட்டி" படத்திற்காக அனுஷ்கா இதுவரை எந்த ஒரு பேட்டியையும் தரவில்லை. படத்திற்காக அவர் வெளிவரத் தயங்குகிறாரா அல்லது புறக்கணிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கில் கூட அனுஷ்கா ஒரு பேட்டியையும் தராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் "பாகுபலி எபிக்" படத்திற்காக அவர் பேட்டி ஒன்றைத் தந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பழைய படத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை அவர் புதிய படமான "காட்டி" படத்திற்கும் தரலாமே என படத்தை வாங்கியவர்கள் புலம்புகிறார்களாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!