அனுஷ்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
டிச 15, 2024
Advertisement
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. பாகுபலி 1, 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் இந்திய அளவில் பிரபலமானார். ஆனால் அதன்பின் அவர் நடித்த படங்கள் பெரிதாக போகவில்லை. கடைசியாக கடந்தாண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிசிட்டி என்ற படத்தில் நடித்தார். இந்தபடம் பெரியளவில் போகவில்லை.
தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ள இவர் கிரிஷ் இயக்கத்தில் ‛காதி" என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் அனுஷ்கா ஒருவரின் கழுத்தை அறுக்கும் படியான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது 2025, ஏப்., 18ல் படம் ரிலீஸ் என வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!