ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன்
மார் 30, 2023
Advertisement
நேரம் படத்தில் நிவின்பாலியின் தங்கையாகவும் ஓம் சாந்தி ஒசனா படத்தில் நிவின்பாலியின் தோழியாகவும் நடித்தவர் அஞ்சு குரியன். தமிழில் "சென்னை டூ சிங்கப்பூர்" "ஜூலை காற்றில் மற்றும் சமீபத்தில் வெளியான சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தநிலையில் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள அஞ்சு குரியன் அங்கே ஸ்கை டைவிங் சாகசம் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அவருடைய நிறைவேற்ற வேண்டிய ஆசைகள் கொண்ட பக்கெட் லிஸ்டில் இந்த ஸ்கை டைவிங்கும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ள அஞ்சு குரியன் பறக்கும் விமானத்தில் இருந்து ஆகாய வெளியில் குதித்து குயீன்ஸ்லாந்து நிலப்பரப்புக்கு மேல் ஸ்கை டைவிங்கில் பறந்த அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்க்கும் இனிமையான ஒன்றாக இருக்கும். இதற்காக குயின்ஸ் லேண்ட் ஸ்கை டைவிங் அமைப்புக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…