
கவினுக்கு வில்லியாக ஆண்ட்ரியா
ஏப் 03, 2024
Advertisement
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் கவின். டாடா படத்தின் வெற்றிக்கு பின் தற்போது இளன் இயக்கத்தில் ‛ஸ்டார்" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர இன்னொரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து புதுமுக இயக்குனர் விக்ரனன் அசோகன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தில் ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!