அடுத்தடுத்த போட்டிகளை சமாளித்து ஓடும் அந்தகன்
ஆக 26, 2024
Advertisement
தியாகராஜன் இயக்கத்தில், பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான படம் "அந்தகன்". இப்படத்திற்கு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து இரண்டு வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 15ல் வெளிவந்த "தங்கலான், டிமான்டி காலனி 2,", கடந்த வாரம் ஆகஸ்ட் 23ல் வெளியான "வாழை" உள்ளிட்ட படங்களின் போட்டிகளையும் சமாளித்து இப்படம் இன்றும் ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக வரவேற்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆன்லைன் தளங்களில் பார்க்க முடிகிறது.
பிரசாந்திற்கு மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்கான வரவேற்பைப் இப்படம் பெற்றுத் தந்துள்ளது. அடுத்த வாரம் விஜய்யுடன் பிரசாந்த் நடித்துள்ள "தி கோட்" படம் வருகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!