
தி கோட் படத்தின் கடைசி அப்டேட் ஓரிரு நாட்களில்…
ஏற்கெனவே பலர் எதிர்பார்த்தபடி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க வாய்ப்பில்லை என்பதுதான் தற்போதைய அப்டேட். இதுவே படத்திற்கான கடைசி அப்டேட் ஆகவும் இருக்கும். விழா நடந்தால் அதில் விஜய் கலந்து கொள்ள வேண்டும், எவ்வளவு கூட்டம் வரும் என்பதெல்லாம் தீர்மானிக்க முடியாத ஒன்று.
எனவே, விஜய் தவிர மற்ற படக்குழுவினர் கலந்து கொள்ளும் விதமாக ஒரே ஒரு வெளியீட்டிற்கு முந்தைய விழா மட்டுமே நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தவிர தெலுங்கு, ஹிந்தியில் படம் வெளியாகிறது. எனவே, சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்கும் என்கிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்புகள் வரலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!