
அமரன் உடன் மோதும் பிரதர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆக 03, 2024
Advertisement
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 30வது படமாக "பிரதர்" எனும் படத்தில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்கா, தம்பி சென்டிமென்ட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படம் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்று(ஆக., 3) இந்த படத்தை வருகின்ற தீபாவளிக்கு வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதே தேதியில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!