
அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை 8 வாரங்களுக்குப் பிறகே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்பே படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால், 5 வார முடிவில் ஓடிடியில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள். பட வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி நிறுவனத்துடன் எந்தத் தேதியில் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அந்த ஒப்பந்தத்தை மீற வாய்ப்பில்லை என்பதால்தான் 5 வாரங்களில் வெளியிடுகிறார்கள், என்பது கோலிவுட் தகவல்.
மேலும், "அமரன்" தற்போது அதிகத் தியேட்டர்களில் ஓடி வந்தாலும் குறைவான பார்வையாளர்களுடன்தான் ஓடி வருகிறது. டிசம்பர் 5ம் தேதி "புஷ்பா 2" வருவதால் அதன்பின் தொடர வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!