
கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ்
கதையின் நாயகனாக சில படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார், தற்போதும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்த மாதம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
நடிகர் தம்பி ராமையாவின் மகன், உமாபதி ராமையா இயக்கத்தில், சமுத்திரக்கனி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள "ராஜாகிளி" படம் டிசம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளது.
அதற்கடுத்து டிசம்பர் 20ம் தேதி சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள "திரு.மாணிக்கம்" படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்கள் தவிர "ராமம் ராகவம்" என்ற படத்திலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இந்தப் படமும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!