இந்தாண்டு ஹிட் படமெல்லாம்... முதல் படத்தில் ஜெயித்த இயக்குனர்கள்
மார் 12, 2026
Advertisement
இந்த ஆண்டு வெளியான படங்களில் தலைவர் தம்பி தலைமையில் முதலில் வெற்றி பெற்றது. ஜீவா நடித்த இந்த படத்தின் இயக்குனர் நிதேஷ் சஹாதேவ். இவர் மலையாளத்தில் ஒரு படம் இயக்கியிருந்தாலும் தமிழுக்கு புதியவர். அந்த படம் வெற்றி பெற்றது. அதேபோல், அபிஷன் ஜீவிந்த் நடித்த வித் லவ் படம் நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை இயக்கிய வரும் மதன் என்ற புதியவர். இப்போது தாய் கிழவியை இயக்கிய சிவகுமார் முருகேசனும் இது முதல் படம். ஆக, இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்களை இயக்கியவர் முதல் பட இயக்குனர்கள்.
அதேபோல் மலையாளத்தில் இருந்து தமிழில் டப்பாகி இங்கே பேசப்பட்ட அனோமி படத்தை இயக்கிய ரியாஸ் மாரத்துக்கும் அது முதல் படம். தெலுங்கில் வெளியாகி, தமிழிலும் ஓரளவு ஓடிய கப்பிள் பிரண்ட்லி படத்தை இயக்கிய அஷ்வினும் அறிமுக இயக்குனர்தான். முதல் படம் என்பதால் இயக்குனர்களிடம் பயர் இருக்கிறது. புதுசாக சிந்திக்கிறார்கள். நல்ல டீம் சேரும்போது படம் வெற்றி பெறுகிறது என்கிறார்கள் திரையுலகில். இப்படி வெற்றி படங்களை கொடுத்தாலும் முதல் படம் என்பதால் இவர்களுக்கு சம்பளம் வெகுவாக குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!