
முழுவதும் நெகட்டிவ் விமர்சனங்கள் : வெற்றி பெறுமா டாக்சிக் ?
படத்தின் முதல் காட்சி முடிந்த உடனேயே இப்படத்திற்கான விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. முழுவதுமாக நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே இப்படத்திற்காக வந்து கொண்டிருக்கிறது.
"ஏ" சான்றிதழ் பெற்ற படம், படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்பத்தினர் கூட இப்படத்தைப் பார்க்காமல் தவிர்ப்பதற்கு வாய்ப்புள்ளது.
நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே ஒரு பக்கம் வந்தாலும், இப்படத்தின் முதல் நாள் வசூல் எப்படியும் 100 கோடியைக் கடந்திருக்கும் என்று முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும், யஷ் நடித்து வெளிவந்த "கேஜிஎப் 2" படம் போல இப்படம் வரவேற்பைப் பெற வாய்ப்பில்லை என்றுதான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!