
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன், கங்கனா
செப் 26, 2024
Advertisement
தலைவி படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான அதிரடி ஆக் ஷன் படம் ‛மிஷன் சாப்டர் 1". இந்த படத்திற்கு பின் விஜய்யின் அடுத்த படம் குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாதவன், கங்கனா ரணாவத் இருவரையும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் ஏ.எல்.விஜய். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு "லைட்" என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். ஏற்கனவே மாதவன், கங்கனா நடிப்பில் தனு வெட்ஸ் மனு என்ற ஹிந்தி படம் வெளியானது. அதேப்போல் விஜய் இயக்கிய தலைவி படத்தில் கங்கனா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…