
புஷ்பா 2 படத்தில் அனிமல் பட நடிகை?
ரூ.400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் புஷ்பா 2ம் பாகம் உருவாகி வருகிறதாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், சுகுமார் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்காலிகமாக இப்படத்தை நிறுத்தி வைத்தனர் என செய்தி பரவியது. ஆனால் அது உண்மையல்ல. சமீபத்தில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் "ஊ சொல்றியா " என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் இந்த பாடல் வைரலானது. இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீலீலா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடனம் ஆட தற்போது அனிமல் படத்தின் மூலமாக பிரபலமான த்ரிப்தி டிம்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்காக அவர் சம்பள தொகை அதிகமாக கேட்பதால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லையாம். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அன்று திரைக்கு வருவதைத்யொட்டி இதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!