
கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட அகண்டா 2
ஆனால், கடைசி நேரத்தில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரையுலகினருக்கும் அதிர்ச்சியளித்தது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கனத்த இதயத்துடன், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் "அகண்டா 2" திட்டமிட்டபடி வெளியாகாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
இது எங்களுக்கு வலி மிகுந்த தருணம், மற்றும் படத்தை எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும், திரைப்பட ஆர்வலருக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தை விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். ஏற்படுத்திய சிரமத்திற்கு எங்கள் உண்மையான மன்னிப்பு. உங்கள் ஆதரவே எங்களுக்கு உலகமே. விரைவில் ஒரு நேர்மறையான புதுப்பிப்பை பகிர்ந்து கொள்வதாக உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிறுவனம் தயாரித்த முந்தைய படங்களுக்கு பைனான்சியர்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை காரணமாகத்தான் இந்த சிக்கல் ஏற்பட்டது என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…