அப்பா வார்த்தையை காப்பாற்றிய ஆகாஷ் முரளி
ஜன 10, 2025
Advertisement
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா பல வருடங்களாக கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியும் "நேசிப்பாயா" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி உள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் ஆகாஷ் முரளி. இப்போது அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "நான் சிறுவயதில் அப்பா உடன் படப்பிடிப்பிற்கு செல்வேன். சினிமா மீதான ஆர்வம் அப்போது இருந்தே வளர்ந்தது. அப்பாவை போன்றே நானும் நடிகனாக வேண்டும் என்ற கனவும் பெருகியது. ஆனால் டிகிரி முடிக்காமல் சினிமாவிற்கு வரக்கூடாது என்று அப்பா கூறிவிட்டார். அதன்பிறகு எனக்கு பிடித்த எம்.பி.ஏ படிப்பை படித்து முடித்தேன். இப்போது சினிமாவில் நடிக்கிறேன்" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!