
12 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் சுகன்யா ரீ-என்ட்ரி
தமிழில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு 90களின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. கடந்த 15 வருடங்களில் இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்த வகையில் தமிழில் 2023ல் "தீ இவன்" என்கிற படத்தில் நடித்திருந்தார். அதேபோல மலையாளத்தில் 2014ல் வெளியான "ஆமையும் முயலும்" படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுகன்யா.
இந்த நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள "வரவு" என்கிற படத்தில் டெய்சி என்கிற கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்துள்ளார். இதற்கு முன்னதாக தமிழில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான "எல்லாம் அவன் செயல்" படத்திலும் சுகன்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!