
தலைப்புடன் அஜித் 62 அறிவிப்பு : மிக விரைவில்…
படத்திற்கு முதலில் சந்தோஷ் நாராயணன் இசை என்று சொல்லப்பட்ட நிலையில் அனிருத் இசைமைக்க உள்ளார் என்பது லேட்டஸ்ட் தகவலாக இருக்கிறது. மகிழ் திருமேனி பெயரில் சமூக வலைத்தளங்களில் சில கணக்குகளில் இருந்து அஜித் 62 பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதனால், அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சார்பில் மகிழ் திருமேனி எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டார்கள்.
தொடர்ந்து பொய்யான பல தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தலைப்புடன் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். படப்பிடிப்பையும் உடனே ஆரம்பிக்க அஜித் தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் உலகச் சுற்றுலா செல்ல உள்ளார் என்றும் தகவல்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!