
தங்கலான் படத்தில் ஆங்கிலேயே நடிகர் டேனியல்
இப்படத்திற்காக நடிகர் விக்ரம் தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோரும் மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க தற்போது ஆங்கிலேயே நடிகரான டேனியல் கால்டாகிரோன் இணைந்துள்ளார்.
1998ல் வெளிவந்த "லெகியோநேய்ர்" என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் அவர் நடித்து வெளிவந்த "த பீச், லாரா க்ரோப்ட் டாம்ப் ரைடர் த க்ராடில் ஆப் லைப், மற்றும் ஆஸ்கர் விருது வென்ற "த பியானிஸ்ட்" ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர். பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர்.
"தங்கலான்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மட்டுமல்லாமல் டுவிட்டர் தளத்திலும் புதிய கணக்கைத் துவங்கி அறிமுகமாகியுள்ளார். அவரை விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் வாழ்த்தி வரவேற்றுள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!