ஹேக்காகி, மீண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டா
ஏப் 05, 2022
Advertisement
சமூகவலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. திரைப்பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் சமூகவலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா அல்லது முடக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை . விரைவில் எனது கணக்கை மீட்டு தர இன்ஸ்டாக்ராமை கேட்டுக்கொள்கிறேன்"" என கூறியிருந்தார்.
தற்போது அவரின் இன்ஸ்டா கணக்கு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டது என கூறி நன்றி தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!