
நாகார்ஜூனாவின் கிங் 100 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!
ரா.கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் 100வது திரைப்படமான "கிங் 100" படத்தின் தலைப்பு குறித்த வீடியோ கிளிம்ப்ஸை நேற்று முன்தினம் அவரது பிறந்த நாளையொட்டி வெளியிட்டார்கள். இந்த வீடியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.
"சங்கராந்திக்கு வஸ்துனாம்" படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் வலுவான மறுபிரவேசம் செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது "கிங் 100" படத்திலும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் அப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், படக்குழு அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, இந்த படத்தில் தானும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.
கிங் 100 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் தபு மற்றும் சுஷ்மிதா பட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!